பூசாரியைக் கொல்ல முயற்சி: 7வது நபர் கைது

ஜார்ஜ்டவுன்: மலேசியாவில் கடந்த வாரம் கோயில் பூசாரி ஒருவரைக் கொலை செய்ய முயற்சி நடை பெற்றது. இதன் தொடர்பில் ஆறு பேர் வரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏழாவது நபரை காவல் துறையினர் நேற்று கைது செய் துள்ளனர். புதன்கிழமை மாலை 7.00 மணி அளவில் ஏர் இடாமில் உள்ள ஒரு வீட்டில் ஏழாவது நபர் கைது செய்யப்பட்டார் என்று ஜார்ஜ்டவுன் காவல் நிலையத்தின் மூத்த அதி காரி ஒருவர் தெரிவித்தார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 56 வயது நபரை ஐந்து நாள் விசாரணைக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இம்மாதம் 21ஆம் தேதி ஏர் இடாமில் உள்ள வீட்டுக்கு வெளியே கோயில் பூசாரியைக் கொல்லும் முயற்சி நடைபெற்றது. ஜாலான் சத்துவில் உள்ள வீட்டுக்கு வெளியே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண் டிருந்த 50 வயது இந்து பூசாரியை நோக்கி சிலர் துப் பாக்கியால் சுட்டனர். அப்போது அவர் வீட்டுக்குள் ஓடிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!