டிரம்ப்: வடகொரியாவுடன் பெரிய மோதல் ஏற்படலாம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியா வுடன் மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் இந்தப் பிரச்சினையில் அரசதந்திர வழியில் தீர்வு காணவே தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார். வடகொரியா, ஏவுகணைகளை பாய்ச்சியும் அணுவாயுத சோதனை களை நடத்தியதாலும் கொரிய தீப கற்பத்தில் பதற்றம் அதிகரித்தது. அதிபராக பொறுப்பு ஏற்று 100வது நாளை கடக்கும் இவ் வேளையில் திரு டிரம்ப், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி யளித்தார்.

அப்போது, "வடகொரியாவுடன் மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்படலாம்," என்றார் அவர். "முன்னைய அமெரிக்க அதிபர்கள் நம்பியதைப் போலவே தற் போதைய நெருக்கடியிலும் அமைதி வழியில் தீர்வு காண விரும்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார். தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை நெருங்கும் வகையில் தொலைதூர ஏவுகணைகளை வடகொரியா பாய்ச்சியது. இதனால் அமெரிக்காவும் பதில் நடவடிக்கையில் இறங்கி விமானம் தாங்கிக் கப் பலை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்ப முடிவு செய்தது. மேலும் தென்கொரியாவில் 'தாட்' ஏவு கணை எதிர்ப்பு சாதனங்களை நிறுவவும் அமெரிக்கா முன்வந்தது. இந்தப் போட்டியில் வட கொரியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் போருக்கு ஆயத்தமாக இருப்பதாகவும் அறி வித்தன.

சுமார் 42 மணி நேரம் அதிபர் டிரம்ப் பேட்டியளித்தார். உலக முழுவதும் வடகொரியா மிகப்பெரிய சவாலாக விளங்கு கிறது என்ற அவர், சீன அதிபர் ஸியை வாயாரப் பாராட்டினார். "வடகொரிய பிரச்சினைக்குத் தீர்வு காண திரு ஸி கடினமாக முயற்சி செய்கிறார் என்று நம்புகி றேன். இந்தப் பிரச்சினையில் குழப்பமோ மரணமோ ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு நன்கு தெரியும்," என்று அதிபர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!