மணிலாவில் குண்டுவெடிப்பு

மணிலாவில் நேற்று குண்டு வெடித்ததில் 14 பேர் காயம் அடைந்தனர். ஆனால் ஆசியான் கூட்டத் திற்கும் இந்த வெடிகுண்டு வெடிப் புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அந்நாட்டின் அதி காரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை பின்னேரத் தில் தென்கிழக்கு ஆசிய நாடு களின் தலைவர்கள் கூடி பேசும் கட்டடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. இது, பழிவாங்கும் நடவடிக்கையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வரு கின்றனர். உள்ளூர் இளையர் கும்பல் களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. “அது ஒரு நாட்டு வெடிகுண்டு. வீட்டில் செய்யப்பட்டது. ஒரு குழாயில் பட்டாசுகளில் பயன் படுத்தப்படும் வெடிபொருட்களை அடைத்து வெடிகுண்டு தயாரிக்கப் பட்டுள்ளது,” என்று போலிஸ் பேச்சாளர் கிம்பெர்லி மொலிடாஸ் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை.