வடகொரியாவின் ஏவுகணை பாய்ச்சும் முயற்சி தோல்வி

சோல்: வடகொரியா மற்றொரு ஏவுகணையை பாய்ச்சி சோதனை யிட்டுள்ளது என்று தென் கொரிய, அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஏவுகணை பாய்ச்சிய சில நொடிகளில் வெடித்து விட் டது என்று அவர்கள் குறிப்பிட் டனர். இதோடு சேர்த்து இரண்டாவது முறையாக வடகொரியாவின் ஏவு கணை சோதனை தோல்வியடைந் துள்ளது. இதற்கிடையே வடகொரியா வின் செயல் சீனாவுக்கும் சீன அதிபருக்கும் மரியாதை அளிக்கும் வகையில் இல்லை என்பதையே காட்டுகிறது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறிப் பிட்டார். வடகொரியாவின் உள்ளூர் நேரப்படி விடியற்காலை பியோங் யாங்கின் தெற்கே உள்ள ஒரு இடத்திலிருந்து ஏவுகணை பாய்ச்சப்பட்டது என்று தென் கொரியா தெரிவித்தது.

வடகொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக ஐநா பாதுகாப்பு மன்றம் கூடியது. இதில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சரும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சரும் மற்ற தலைவர்களைச் சந்தித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!