சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்கக் கப்பலுக்கு துணையாக போர்க்கப்பலை அனுப்பியது ஜப்பான்

தோக்கியோ: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள வேளையில் அமெரிக்க சரக்குக் கப்பல் ஒன்று பசிபிக் கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கப்பலுக்கு துணையாக ஜப்பான் அதன் மிகப்பெரிய போர்க்கப்பலை அனுப்புகிறது. இஸ்மோ என்ற போர்க்கப்பல் தோக்கியோ அருகே உள்ள துறைமுகத்திலிருந்து இன்று புறப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வடகொரியாவின் ஏவுகணை சோதனை இரண்டாவது முறையாக தோல்வி அடைந்த நிலையில் அந்நாடு தொடர்ந்து சினமூட்டும் செயலில் ஈடுபடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா- வடகொரியா இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க அனைத்துலக நாடுகள் தலையிட்டு சமரசம் செய்ய முன்வர வேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon