தென்சீனக் கடல் பிரச்சினை: ஆசியானின் மென்மையான அணுகுமுறை

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் சனிக்கிழமை நடந்த ஆசியான் தலைவர்கள் மாநாட்டில் தென்சீனக் கடல் பிரச்சினை குறித்த விவகாரத்தில் ஆசியான் நாடுகள் மென்மையான அணுகு முறையை பின்பற்றியுள்ளன. கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை இதனைப் புலப்படுத்தியது. மணிலாவில் நடந்த மாநாட்டில் தென்சீனக் கடல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சீனாவை ஆசியான் நாடுகள் நெருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த விவகாரம் குறித்து ஆசியான் விரிவாக எதுவும் கூறவில்லை. சர்ச்சைக்குரிய அந்தக் கடல் பகுதியில் செயற்கைத் தீவுகளை சீனா உருவாக்கியிருப்பது பற்றியும் அதன் நடவடிக்கைகளைப் பற்றி யும் கூட்டறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!