சாதனைகளைப் பட்டியலிட்ட டிரம்ப், ஊடகங்கள் மீது சாடல்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற இந்த 100 நாட்களில் தாம் ஆற்றிய பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிட்டுப் பேசிய திரு டிரம்ப், ஊடகங்களை கடுமையாகச் சாடினார். திரு டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியேற்று 100 நாட்கள் நிறை வடைந்திருப்பதைக் குறிக்கும் வகையில் பென்சில்வேனியாவில் சனிக்கிழமை நடந்த பேரணியில் திரு டிரம்ப் உரையாற்றினார். ஆதரவாளர்கள் முன்னிலை யில் உரையாற்றிய திரு டிரம்ப், ஒன்றன்பின் ஒன்றாக தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றி வருவதாகக் கூறினார். தன்னைப் பற்றி குறை கூறும் விமர்சனங்கள் எவ்விதத் தொடர் பும், புரிதலும் இல்லாத சில பத்திரிகையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் திரு டிரம்ப் தெரிவித்தார்.