ஆட்டம் கண்ட விமானம்; பயணிகள் பலர் காயம்

பேங்காக்: மாஸ்கோவிலிருந்து பேங்காக்குக்குச் சென்று கொண்டிருந்த ரஷ்யாவின் ஏரோஃபிளோட் விமானம் ஆட்டம் கண்டதில் குறைந்தது 27 பயணிகள் காயமடைந்தனர். பேங்காக் விமான நிலையத்தில் தரையிறங்க 40 நிமிடங்கள் இருந்தபோது விமானம் மோசமான வகையில் ஆட்டம் கண்டதாக ஏரோஃபிளோட் விமானச் சேவை அறிக்கை வெளியிட்டது. விமானம் ஆட்டம் கண்டபோது வானம் தெளிவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் போனதாக ஏரோஃபிளோட் கூறியது.