சான் டியேகோவில் துப்பாக்கிச்சூடு: எட்டு பேர் காயம்

சான் டியேகோ: கையில் பீர் புட்டி யை வைத்துக்கொண்டு துப்பாக் கிச்சூடு நடத்திய ஆடவர் ஒருவரை அமெரிக்காவின் சான் டியேகோ மாநில போலிசார் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் சான் டியேகோவில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சொந்தமான நீச்சல் குளம் அருகே சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 9 மணி அளவில் நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலில் எட்டு பேர் காயமுற்றனர். தாக்குதல் குறித்து போலி சாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்தனர். தாக்குதல்காரன் போலிஸ் அதிகாரிகளைப் பார்த்து துப்பாக்கி யால் குறிவைத்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சான் டியேகோ போலிஸ் பிரிவின் தலைவர் ஷெல்லி சிம்மர்மன் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

துப்பாக்கிக்காரனின் அடை யாளமும் தாக்குதலுக்கான காரண மும் இன்னும் வெளியிடப்பட வில்லை. விசாரணை நடத்தப் படுகிறது. துப்பாக்கிக்காரன் பலரைக் குறிவைத்து சுட்டதை நேரில் பார்த்ததாக அந்தக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார். சுடப்பட்டவர்கள் தரையில் கிடந்ததாகவும் காயமுற்ற ஒருவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றதாக வும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!