உலகிலேயே ஆக வயதான முதியவர் 146வது வயதில் மரணம்

ஜகார்த்தா: உலகிலேயே ஆக வயதானவர் என்று கருதப்பட்ட முதியவர் ஒருவர் அவரது 146வது வயதில் மரணம் அடைந் ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்தோனீசியரான எம்பா கோட்டோ என்று அழைக்கப்பட்ட சோடிமெட்ஜோ என்ற முதியவர் மத்திய ஜாவாவில் உள்ள அவரது கிராமத்தில் மரணம் அடைந்ததாக குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார். அந்த முதியவரின் உடல்நிலை குன்றியதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி மருத்துவ மனையில் அவர் சேர்க்கப் பட்டதாகவும் ஆனால் 6 நாட் களுக்குப் பிறகு மருத்துவமனை யிலிருந்து அவர் வீடு திரும்பிய தாகவும் கூறப்பட்டது. இருப் பினும் அவரால் உணவு எதுவும் சாப்பிட முடியாத நிலையில் ஒரு சில நாட்களில் அவர் மரணம் அடைந்ததாக அவரது பேரன் கூறினார். எம்பா கோட்டோ 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்தோனீ சிய அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தோனீசியாவில் 1900ஆம் ஆண்டில்தான் பிறப்புப் பதிவு முறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்கலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!