தென்கொரியா: பாரந்தூக்கி விழுந்ததில் 6 பேர் பலி, பலர் காயம்

சோல்: தென்கொரியாவில் உள்ள கப்பல் பட்டறையில் ஒரு பாரந்தூக்கி திடீரென்று கீழே விழுந்ததில் ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்ததாகவும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்த தாகவும் தென்கொரிய அதிகாரி கள் கூறினர். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப்பணியாளர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணத்தை அறிய புலன்விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சாம்சுங் நிறுவனம் நடத்தும் கப்பல் பட்டறையில் திங்கட் கிழமை அந்த விபத்து நிகழ்ந்த தாகவும் விபத்தில் உயிரிழந்த வர்கள் அல்லது காயம் அடைந்த வர்கள் அனைவரும் துணை குத்தகையாளர்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார். அப்பகுதியில் பணியில் ஈடு பட்டிருந்த ஊழியர்கள் மீது அந்த பாரந்தூக்கி விழுந்தது. அந்த கப்பல் பட்டறையில் தற்சமயம் எல்லா பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டது. தென்கொரியாவில் தொழிற்பேட்டைகளில் விபத்து கள் நிகழ்வது அரிது. இந் நிலையில் கப்பல் பட்டறையில் பாரந்தூக்கி கீழே விழுந்தது தென்கொரிய மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.