தென்கொரியாவில் ஏவுகணை எதிர்ப்பு சாதனம்

சோல்: சர்ச்சைக்குரிய அமெரிக் காவின் ஏவுகணை எதிர்ப்பு சாதனம் தென்கொரியாவில் செயல்படத் தொடங்கியிருப்பதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது. வடகொரியா பாய்ச்சும் ஏவு கணைகளை பாதிவழியிலேயே இடைமறித்து தகர்க்கக்கூடிய ஆற்றல் பெற்ற அந்த புதிய தற்காப்பு முறை ஒரு சில மாதங்களில் முழுமையாகச் செயல்படும் என்று ராணுவம் குறிப்பிட்டுள்ளது. வடகொரியாவின் மிரட்டல் களாலும் அமெரிக்க போர்க் கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பலும் கொரிய கடல் பகுதியில் காணப்படுவதாலும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதி கரித்துள்ளது. தாட் ஏவுகணை தற்காப்பு சாதன முறையை செயல்படுத்த இருப்பதாக அமெரிக்கா சென்ற வாரம் அறிவித்தது. இந்த முறையைப் பயன்படுத்து வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தென்கொரி யாவைத் தற்காக்க ஏவுகணை எதிர்ப்பு சாதனம் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தென் கொரியாவில் உள்ள அமெரிக்கப் படை பேச்சாளர் ஒருவர் கூறி னார். ஆரம்பத்தில் இந்த சாதனம், ஏவுகணைகளை இடை மறித்து தடுக்கக்கூடிய ஆற்றலை மட்டுமே கொண்டுள்ளது என்று அப்பேச்சாளர் சொன்னார்.