ரஷ்யாவுடன் நட்பை நாடும் வடகொரியத் தலைவர்

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு வாழ்த்து அட்டை களை அனுப்பியபோது முதல் வாழ்த்து அட்டை ரஷ்ய அதிபர் புட்டினுக்குத்தான் சென்றது. வடகொரியாவின் நட்பு நாடான சீனாவுக்குத்தான் திரு கிம் முதலில் சீனப்புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பியிருக்க வேண் டும். ஆனால் ரஷ்ய அதிபருக்கு முதல் வாழ்த்து அட்டையை திரு கிம் அனுப்பியதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனா உள்ளிட்ட வடகொரி யாவின் நட்பு நாடுகளின் தலைவர் கள் சந்தித்துப் பேசவிருந்த வேளையில் அதற்கு முன்னதாக திரு புட்டினுக்கு திரு கிம் புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பியதாக அதிகாரபூர்வ செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது. கிம்மின் இச்செயல், ரஷ்யா வுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள திரு கிம் எண்ணி யிருக்கலாம் என்பதைக் காட்டு கிறது என்று வடகொரியா பற்றி ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்கள் சிலர் கூறினர்.

வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டத்தை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வடகொரியாவுக்கு எதிரான தடைகளை ஒருவேளை சீனா தீவிரப்படுத்தினால் அதனால் ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ள ரஷ்யாவின் உதவியை திரு கிம் நாடக்கூடும் என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!