பிரான்ஸ் வேட்பாளர்கள் விவாதம்

பாரிஸ்: பிரெஞ்ச் அதிபர் தேர்தலை யொட்டி நடைபெற்ற இறுதி விவாதத்தில் லி பென்னைத் திறமையாகச் சமாளித்த இம்மானு வேல் மேக்ரன் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். புதன் கிழமை மாலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு வேட்பாளர்களும் மோதினர். இரண்டு மணி நேரத் துக்கு மேல் நடைபெற்ற விவாதத் தில் தீவிரவாதம், பொருளியல், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினர். ஆனால் மேக்ரன் முன் வைத்த கருத்துகள் 63% பார்வையாளர் களை ஈர்த்தது. திருமதி லி பென் தம்மை எதிர்த்து போட்டியிடும் மேக் ரன்னுக்கு நிதி, அரசாங்கத்தில் வேலை பார்த்த அனுபவம் இல்லை என்று சாடினார். மேக்ரன்னின் உலகமயமாக்கல் கொள்கையையும் குறைகூறிய லி பென், "அவர் கூறும் பிரான்ஸ், ஒரே அறையில் அனைவரும் தங் களுக்காகப் போராடுவதைப் போல உள்ளது," என்றார். இதற்குப் பதிலடி கொடுத்த மேக்ரன், "தேசிய முன்னணி தலைவர் வெளிப்படையாகவே பொய் சொல்கிறார்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!