தென்கொரியாவில் முன் வாக்குப்பதிவு

சோல்: தென்கொரியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ள வேளையில் அதிபர் தேர் தலுக்கான முன்கட்ட வாக்குப் பதிவு நேற்று தொடங்கியது. வரும் மே 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆனால் முதல்முறையாக இம்முறை முன் னரே வாக்குப்பதிவு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முன்னைய அதிபரான பார்க் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அண்டை நாடான வடகொரியா தொடர்ந்து மிரட்டி வரும் நிலை யிலும் அமெரிக்காவின் ஏவுகணை தற்காப்பு சாதனங்களைத் தென் கொரியாவில் நிறுவ உள்ளூர் மக்களே எதிர்ப்பு தெரிவிக்கும் வேளையிலும் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தென் கொரியாவில் ‘தாட்’ ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களை நிறுவ அமெரிக்கா முன் வந்தாலும் அதற்கான ஒரு பில்லியன் டாலர் செலவுகளைத் தென் கொரியா ஏற்க வேண்டும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.