‘கிம் ஜோங்கை கொலை செய்ய சிஐஏ சதித்திட்டம்’

சோல்: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவும் வேளையில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைக் கொலை செய்ய அமெரிக்க உளவுத் துறை சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியாவில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் திரு கிம் ஜோங் உன் கலந்து கொள்ளும்போது ஆபத்தான ரசாயனப்பொருளைப் பயன்படுத்தி அவரைக் கொல்ல அமெரிக்க உளவுத் துறையும் தென்கொரிய உளவுத் துறையும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருப்பதாக வடகொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கதிரியக்கப் பொருள் அல்லது நச்சுப் பொருளைப் பயன்படுத்த அவ்விரு நாடுகளின் உளவுத் துறை திட்டமிட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்ததாக ஊடகங்கள் கூறின.