டிரம்ப்: உலகில் உள்ள அழகான நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

நியூயார்க்: ஆஸ்திரேலியப் பிரதமருடனான தமது உறவு மிகச் சிறப்பானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். நியூயார்க்கில் ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை சந்தித்துப் பேசிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார். "ஆஸ்திரேலியா எனக்கு மிகவும் பிடிக்கும்," என்று திரு டிரம்ப் அப்போது கூறியதாக ஏஎஃப்பி தகவல் தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல், வர்த்தகம், தேசிய பாதுகாப்பு ஒத்துழைப்பு, குடியேறிகள் பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடந்தினர்.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 1,200 அகதிகளை ஏற்பது தொடர்பிலான உடன்பாட்டில் கையெழுத்திட அமெரிக்கா தயங்கியதால் இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் அந்த உடன்பாட்டை மதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு வருகையளிக்க இருப்பதாக திரு டிரம்ப் கூறினார். உலகில் உள்ள மிக அழகான நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால் எப்போது அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!