மோசுல் நகரில் ஐஎஸ் போராளிகளுடன் நீடிக்கும் சண்டை

பாக்தாத்: ஈராக்கின் மோசுல் நகரில் ஈராக்கியப் படையினரை எதிர்த்து ஐஎஸ் போராளிகள் கடுமையாகச் சண்டையிட்டு வருவதால் சண்டைக்குப் பயந்து ஏராளமானோர் அங்கிருந்து தப்பிச் செல்வதாக தகவல்கள் கூறுகின் றன. ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் இருந்த பல பகுதிகளை அந்நாட்டுப் படை திரும்பக் கைப் பற்றியுள்ள நிலையில் மோசுல் நகரைக் கைப்பற்றுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். போராளிகளின் கோட்டை யாகக் கருதப்பட்ட மோசுல் நகரின் பெரும் பகுதியை ஈராக்கியப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போதிலும் அந் நகரை முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை. அந்நகரின் வடமேற்குப் பகுதியில் கடந்த மூன்று நாட் களாக ஈராக்கியப் படையினருக் கும் ஐஎஸ் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. மோசுல் நகரின் 70 விழுக்காட்டுப் பகுதியை கைப்பற்றி விட்டதாகவும் விரைவில் அந் நகரை முழுமையாக கைப்பற்றி விடுவோம் என்றும் ஈராக்கிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மோசுல் நகரில் போராளிகளுக்கும் ஈராக்கியப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்துடன் தப்பியோடும் மக்கள். படம்: ஏஎஃப்பி