வேட்பாளர் மெக்ரோனுக்கு எதிராக கணினி ஊடுருவல்

பாரிஸ்: பிரான்சில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள வேளை யில் வாக்களிப்புக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக அதிபர் வேட்பாளர் இம்மானுவல் மெக்ரோனுக்கு எதிராக கணினி ஊடுருவலில் சிலர் ஈடுபட்டதாக அவரது பிரசாரக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இறுதிப் பிரசார நாளான வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்னர் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் இணையத்தில் வெளிவந்ததாக திரு மெக்ரோனின் பிரசாரக் குழுவினர் தெரிவித் துள்ளனர். தேர்தலில் மிதவாதியான சுயேச்சை வேட்பாளர் இம்மானுவல் மெக்ரோனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் புலப்படுத்தும் வேளையில் அவரது தனிப்பட்ட மின்னஞ்சல் தகவல்கள், வர்த்தகம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவரது தேர்தல் பிரசாரக் குழு அதிகாரிகளின் மின்னஞ்சல் விவரங்கள் அடங்கிய ஆவணங் களும் இணையத்தில் வெளி வந்துள்ளன.

பிரான்சில் இன்று நடைபெறும் தேர்தலில் வலதுசாரி தேசிய முன்னணிக் கட்சி வேட்பாளர் மரின் லி பென்னுக்கும் (இடது), மிதவாதியும் முன்னாள் பொருளியல் அமைச்சருமான இம்மானுவல் மெக்ரொனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!