மக்களின் ஆதரவைப் பெறுவதில் நஜிப் எதிர்நோக்கும் சவால்

கோலாலம்பூர்: மலேசியாவில் பொதுத் தேர்தலுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவைப் பெறுவதில் பிரதமர் நஜிப் ரசாக் சில சிரமங்களை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது. 1எம்டிபி விவகாரம் தொடர் பிலான பிரச்சினை முடிந்துவிட்ட போதிலும் மலேசியாவில் தற்போது அதிகரித்துள்ள மக் களின் வாழ்க்கைச் செலவு எதிர்வரும் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு பாதிப்பை ஏற் படுத்தலாம் என்று தெரிகிறது. மலேசியாவின் 1.6 மில்லியன் அரசாங்க ஊழியர்களின் ஆதரவு திரு நஜிப்பிற்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

மாநில மானியத் தொகை குறைக்கப்பட்டு பொருள் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவில் தற்போது விலைவாசி உயர்ந்தது. மலேசியாவில் கடந்த இரு தேர்தல்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களும் நகரப்புற மக்களும் அம்னோ தலைமை யிலான கூட்டணியை புறக் கணித்ததற்கு விலைவாசி உயர்வு முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. 2018ஆம் ஆண்டுக்குள் அடுத்த தேர்தலை நடத்த மலேசி யாவுக்கு நேரம் இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டே தேர்தலை நடத்த திரு நஜிப் விரும்புவதாகத் தெரிகிறது. எதிர்வரும் தேர்தலில் திரு நஜிப் வெற்றி பெறுவார் என்ற போதிலும் அமோக ஆதரவைப் பெறுவது சிரமம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!