வெட்டுக்கத்திகளுடன் உணவகத்தினுள் நுழைந்து பணத்தை சூறையாடிய கொள்ளையர்கள்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அம்பாங், தாமான் மெலாவதி பகுதியில் உள்ள ஓர் உணவகத் தினுள் வெட்டுக்கத்திகளுடன் நுழைந்த 6 பேர் அங்கிருந்த பணத் தையும் பொருள்களையும் கொள்ளை யடித்துச் சென்றதாக போலிசார் கூறினர். அந்த கொள்ளைச் சம்பவம் சனிக்கிழமை இரவு 9.30 மணியள வில் நடந்ததாகக் கூறப்பட்டது. மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய அந்த 6 பேரும் ஆயுதங்களுடன் உணவகத்தினுள் புகுந்து 30,000 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கத்தையும் பொருள்களையும் அபகரித்துச் சென்றதாக போலிசார் கூறினர். அந்த 6 பேரும் முகமூடி அணிந்திருந்ததாகவும் கொள்ளை யர்கள் உள்ளே நுழைந்தபோது அந்த உணவகத்தில் 8 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

முகமூடியணிந்த கொள்ளையர்கள் 6 பேர் ஓர் உணவத்தினுள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்துச் செல்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. படம்: தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்