குவாண்டாஸ் தலைமை நிர்வாகி முகத்தில் திடீரென்று ‘கிரீம்’ பூசியவரிடம் விசாரணை

பெர்த்: குவாண்டாஸ் நிறுவன தலைமை நிர்வாகி ஆலன் ஜாய்ஸ் பெர்த் விமான நிலையத் தில் ஒரு கூட்டத்தில் உரை யாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒருவர் அவர் முகத்தில் கிரீமை பூசிவிட்டுச் சென்றார். கண்இமைக்கும் நேரத்தில் யாருமே எதிர்பாராத இந்தச் சம்பவம் நேற்று நடந்தது. குவாண்டாஸ் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற இந்த 9 ஆண்டு காலத்தில் இப்படியொரு சம்பவம் நடந்தது இல்லை என்று திரு ஆலன் ஜாய்ஸ் கூறினார். அவர் முகத்தில் கிரீமைப் பூசியவரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்ற னர். அந்த நபர் எதற்காக திரு ஆலன் ஜாய்ஸ் முகத்தில் கிரீமைப் பூசினார் என்பது இன்னும் தெரியவில்லை. அது என்ன வகை கிரீம் என்பதை தன்னால் உணரமுடியவில்லை என்று கூறிய ஆலன் ஜாய்ஸ், "முதலில் என் முகத்தை சுத்தம் செய்ய பெர்த்தில் ஒருவர் தேவைப்படுகிறார்," என்று சொன்னார்.

குவாண்டாஸ் தலைமை நிர்வாகி ஆலன் ஜாய்ஸ் உரையாற்றியபோது அவர் முகத்தில் ஒருவர் 'கிரீமை' பூசினார். படம்: செவன் நியூஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!