ஜப்பானில் நிலநடுக்கம்

தோக்கியோ: ஜப்பானை நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரி வித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவானது. ஜப்பானின் தென் பகுதியிலுள்ள மியாகோ தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் விடுக்கப் படவில்லை. கடல் அலையில் மாறுதல் ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நில நடுக் கம் காரணமாக ஏற்பட்ட உடனடி பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை. ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை ஏற்பட்டதால் 18,500 பேர் உயிரிழந்தனர். புகுஃ‌ஷிமா அணுமின் நிலையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.