பிலிப்பீன்ஸ் செல்வோருக்கு எச்சரிக்கை

மணிலா: பிலிப்பீன்சில் சுற்றுலாப் பயணிகள் நாடிச் செல்லும் இடங்களில் வெளிநாட்டினரைக் கடத்திச் செல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல் கிடைத் திருப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் ஆலோசனை கூறியுள்ளன. அந்த இடங்களில் பாதுகாப்பை பிலிப்பீன்ஸ் அதிகரித்துள்ளது.