அஹோக்கின் ஆதரவாளர்கள் ஜகார்த்தாவில் மாபெரும்பேரணி

ஜகார்த்தா: சமய நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஜகார்த்தா ஆளுநர் அஹோக் என்று அழைக் கப்படும் பசுக்கி புர்னாமாவுக்கு அங்குள்ள நீதிமன்றம் ஈராண்டு சிறைத் தண்டனை விதித்த மறுநாள் அவரது ஆதரவாளர்கள் ஜகார்த்தாவில் உள்ள நகர மண்டபத்தில் ஒன்றுதிரண்டனர். நகர மண்டபத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற ஆயிரத் திற்கும் மேற்பட்டோர், பசுக்கி புர்னாமாவை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிற உடைகளை உடுத்தியிருந்தனர்.

“நீதிக்காகப் போராடுவோம்,” என்று தற்காலிக ஆளுநர் பொறுப்பை ஏற்றிருக்கும் ஜரோட் சைஐபுல் ஹிடயாட் கூறினார். இவர் திரு புர்னாமாவின் உதவியாளர் ஆவார். இஸ்லாமிய சமயத்தை அவமதித்ததான குற்றச்சாட்டின் பேரில் புர்னா மாவுக்கு நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை ஈராண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஜகார்த்தாவில் சென்ற மாதம் நடந்த தேர்தலில் திரு பசுக்கி தோல்வி அடைந்ததும் தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையும் அவரது ஆதர வாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஜகார்த்தா நகர மண்டபத்தில் ஒன்றுதிரண்ட அஹோக்கின் ஆதரவாளர்கள் அவரை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி கிடைக்கும் வரை போராடப்போவதாக அவர்கள் கூக்குரல் எழுப்பினர். படம்: ராய்ட்டர்ஸ்