$105 மி. மதிப்புள்ள வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

லிபியாவில் போராடி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் விற்பதற்காக இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 'ட்ரமடோல்' எனும் வலிநிவாரணி மாத்திரைகளை இத்தாலிய போலிசார் கைப்பற்றி இருப்பதாகச் செய்திகள் வெளி யாகியுள்ளன. மொத்தம் 37 மில்லியன் மாத் திரைகள் பிடிபட்டதாகவும் அவற் றின் மதிப்பு 75 மி. அமெரிக்க டாலர் (S$105 மி.) என்றும் கூறப் பட்டது. போர்வைகள், 'ஷாம்பு'கள் எனக் கூறி, அவை மூன்று கொள் கலன்களில் அடைக்கப்பட்டு, சரக்குக் கப்பல் மூலம் லிபியாவின் மிஸ்ராட்டா, தொப்ருக் நகரங் களுக்கு எடுத்துச் செல்லப்பட இருந்தன. ஆனால், வழியில் இத்தாலி யின் ஜெனோவா துறைமுகத்தில் அவற்றை போலிசார் கைப்பற்றி யதாக 'தி டைம்ஸ்' செய்தி கூறு கிறது. 'ஓப்பியம்' போன்ற செயற்கைப் பொருளான 'ட்ரமடோல்' வலிநிவா ரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. அம்மாத்திரைகள் அனைத்தும் இந்தியாவில் இருந்து வந்ததாகக் கூறிய இத்தாலிய போலிசார், அவை இரண்டு காரணங்களுக்காக அனுப்பப்பட்டு இருக்கலாம் என்றும் குறிப்பிட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!