பெண்ணைப் பிணை பிடித்த ஆடவர் கைது

கோத்தா கினபாலு: கோத்தா கின பாலு லுயாங்கில் பிணையாளி யாக சிக்கிய ஒரு பெண் இரண்டு மணி நேரம் அச்சத்தில் உறைந்து போனார். அவரை ஆடவர் ஒருவர் கத்தி முனையில் பிணைப் பிடித்திருந் தார். கைது செய்யப்படுவதிலிருந்து தப்புவதற்காக சந்தேக நபர் அந்த வழியாகச் சென்ற பெண்ணை கத்தி முனையில் பிணைப் பிடித் தார். இதனால் பிலிப்பீன்ஸ் நாட் டைச் சேர்ந்த பெண், இரண்டு கிலோ மீட்டர் தூரம் அவரை பின் தொடர்ந்து செல்ல வேண்டி யிருந்தது. காவல்துறையினர் விடாமல் பேச்சு கொடுத்து சந்தேக நபரை மடக்க முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு முன்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து சந்தேக நபர் திருட முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்ய முயற்சி செய்தனர். அந்த சமயத்தில் ஒரு பெண் ணை அவர் பிணை பிடித்தார் என்று கோத்தா கினபாலு நகர போலிஸ் துணைத்தலைவர் அப்துல் ரக்மான், 27 கூறினார். லுயாங் பிரதான சாலையில் நுழைவதற்கு முன்பாக அந்தப் பெண்ணை சந்தேக நபர் குடி யிருப்பு பேட்டைகள் வழியாக இழுத்துச் சென்றார். இரவு 8.30 மணியளவில் ஜாலான் டாமாயை சந்தேக நபர் நெருங்கியதும் போலிசார் தடுப்பு களை அமைத்து சாலைகளை மூடினர். இதற்கிடையே பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டப் போவதாகவும் சந்தேக நபர் பல முறை மிரட்டினார். ஆனால் சந்தேக நபரின் கவனம் திசை திரும்பிய சில நொடிகளில் அவர் மீது பாய்ந்த போலிசார் மடக்கிப் பிடித்தனர்.

இரண்டு மணி நேரம் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை காவல்துறையினர் மீட்டனர். படம்: த ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!