அணுவாயுத விவகாரம் குறித்து மூனும் ஸியும் பேச்சு

சோல்: சீன அதிபர் ஸி ஜின்பிங், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அணுவாயுத பதற்றம் குறித்து தென் கொரியாவின் புதிய அதி பரான மூன் ஜேவுடன் ஆலோ சனை நடத்தினார். அப்போது கொரிய தீபகற் பத்தை அணுவாயுதமற்ற வட் டாரமாக்குவதே குறிக்கோள் என்றும் திரு ஸி சொன்னார். அணுவாயுதப் பிரச்சினை களை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அதுவே அனைவருக்கும் நல்லது என்றும் அவர் தெரிவித்தார். கொரிய தீபகற்பத்தின் அமை திக்கும் வளப்பத்துக்கும் தென் கொரியா உட்பட அனைத்து தரப் பினருடனும் சேர்ந்து செயல்படு வதையே சீனா விரும்புவதாகவும் சீன அதிபர் குறிப்பிட்டார். வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருவது சீனாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.