புலனாய்வு துறை இயக்குநர் கோமே நீக்கம்: ‘ரஷ்ய விசாரணையே முக்கிய காரணம்’

வா‌ஷிங்டன்: மத்திய புலனாய்வுத் துறை இயக்குநராக இருந்த கோமே, ரஷ்ய விசாரணையில் தீவிரம் காட்டியதால்தான் அவரை பதவியிலிருந்து அதிபர் டிரம்ப் நீக்கியதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. திரு கோமே பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்பு ரஷ்யத் தொடர்பு குறித்த தகவல்களைத் திரட்டி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியிருந்தார். இதற்கு மறுநாளே அவர் பதவியை இழந்தார். திரு கோமே பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு திரு டிரம்ப்பின் சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே விமர்சித்து வருகின்றனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் குறைகூறி வரு வதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது. ஆனால் கோமே தனது பணி யில் சிறப்பாகச் செயல்படவில்லை என்று கூறிய திரு டிரம்பின் நிர் வாகம், மத்திய புலனாய்வுத்துறை மேற்கொண்ட ரஷ்ய விசாரணை காரணமல்ல என்று கூறியது. இதற்கிடையே அதிபர் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவை(இடம்) சந்தித்தார். உடன் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் செர்கெய் கிஸ்லியாக். இந்தப் படத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்டது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!