மூன்று துருக்கியர்களை நாடு கடத்தியது மலேசியா

கோலாலம்பூர்: மலேசியா சென்ற வாரம் கைது செய்த துருக்கி நாட்டவர் மூவரை சொந்த நாட்டுக்கு நாடு கடத்தியது. அந்த மூவரையும் துருக்கிய அதிகாரிகள் தேடி வந்ததாக மலேசியா கூறியது. துருக்கியில் சென்ற ஆண்டு ஏற்பட்ட புரட்சிக்குக் காரணகர்த்தா என்று கூறப்படும் சமய போதகர் ஒருவருக்கும் அந்த மூவருக்கும் தொடர்பு இருப்பதாக துருக்கி கூறுகிறது. இந்நிலையில் அந்த மூவரையும் துருக்கி நாட்டுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கியின் நெருக்குதலுக்கு மலேசியா அடிபணிந்து போயி ருப்பது போல் தெரிகிறது என்று மனித உரிமை குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன. அந்த மூவரும் வியாழக்கிழமை இரவு துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். கராமன், இசான் அஸ்லான் ஆகிய இருவரும் சென்ற வாரம் மலேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து நாட்டின் பாதுகாப்பு காரணத்திற்காக துருக் கியைச் சேர்ந்த இஸ்மெட் ஓசிலிக் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத அமைப்பு நடவடிக்கைகளில் அந்த மூவரும் ஈடுபட்டிருந்தது போலிஸ் புலன் விசாரணை மூலம் தெரிய வந்ததாக திரு காலிட் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!