டிரம்ப் பேச்சுக்கு வடகொரியா தயார்

சோல்: சுமூகமான சூழ்நிலை நில வினால் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று வடகொரியா கூறியுள்ளது. நார்வேயில் முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவரை சந்தித்ததைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்துடன் பேச்சு நடத்தும் சாத்தியம் உருவாகியிருப்பதாக வடகொரிய மூத்த அதிகாரி ஒருவர் சொன்னார். முன்பு பேசிய அமெரிக்க அதி பர் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் பேச விருப் பம் தெரிவித்திருந்தார். வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை, அணுவாயுதத் திட்டங் களால் கொரியத் தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்தபோது டிரம்ப் இவ்வாறு கருத்துரைத்தார். வடகொரியாவிலிருந்து நார்வே பயணம் மேற்கொண்ட வடகொரிய வெளியுறவு அமைச்சின் அமெ ரிக்க விவகாரங்களுக்கான அதி காரி சோ சன்-ஹுய் பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித் தார்.

சில நாட்களுக்கு முன்பு தேதி குறிப்பிடாமல் வெளியிடப்பட்ட இந்தப் படத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தற்காப்பு அரண்களைப் பார்வையிடுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்