தென்கொரிய படகில் மனித எலும்புகள்

சோல்: தென் கொரிய கடற் பகுதியில் மூழ்கிய கப்பலிலிருந்து சந்தேகத்திற்கிடமான மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரி வித்தனர். காணாமல் போன அந்தக் கப்பல் கடந்த மார்ச் மாதம் மீட்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 6,800 டன் எடை கொண்ட கப்பல் தென்கொரியாவின் தென் மேற்கு கடற்பகுதியில் மூழ்கியது. இதில் 300க்கும் மேற்பட்டோர் மாண்டனர். இவர்களில் பெரும்பாலோர் சுற்றலா சென்ற மாணவர்கள். சனிக்கிழமை அன்று எலும்புகள் மீட்கப்பட்டன என்று கடற்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. தடவியல் நிபுணர்கள், மர பணு சோதனைக்காக எலும்பு களை சோதனைச் சாலைக்கு அனுப்பி வைத்தனர் என்று அதி காரிகள் கூறினர். ஆனால் சோதனை முடிவுகள் தெரிய ஒரு மாத காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. நாட்டின் மிக மோசமான இந்தப் பேரிடரில் இன்னமும் ஒன்பது மாணவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த புதன் கிழமையிலிருந்து ஒவ்வொரு நாளும் மனித எலும்புகளை ஊழியர்கள் மீட்டு வருகின்றனர்.

தென்கொரியாவின் சோலுக்கு 400 கிலோ மீட்டர் தொலைவில் சிதைந்து கிடக்கும் கப்பலிலிருந்து எஞ்சியவற்றை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். படம்: இபிஏ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!