அதிபர் டிரம்ப்: வடகொரியாவை எல்லா நாடுகளும் நெருக்க வேண்டும்

அனைத்துலக வேண்டுகோளைப் புறக்கணித்து மீண்டும் ஓர் ஏவு கணைச் சோதனையை நடத்தி இருக்கும் வடகொரியாவுக்கு எதி ரான பொருளியல் தடைகளை வலுப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியாவின் ஆக அண் மைய சினந்தூண்டும் நட வடிக்கை அதற்கு எதிரான பொருளியல் தடைகளை மேலும் அதிகரிக்க எல்லா நாடுகளுக்கும் அழைப்பு விடுப்பதாக அமைந் துள்ளது என வெள்ளை மாளி கையின் அறிக்கை தெரிவிக் கிறது. வடகொரியா செலுத்திய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று கொரிய தீபகற்பம், ஜப்பான், ரஷ்யாவின் கிழக்குப் பகுதி ஆகியவற்றால் சூழப்பட்ட ஜப்பானிய கடற் பகுதியை அடைந்தது. ரஷ்ய மண்ணின் அருகே ஏவுகணையின் தாக்கம் ஏற்பட் டால் அது ரஷ்யாவுக்கு மகிழ் வைத் தரும் என அதன் அதிப ரால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது என்று குறிப் பிட்ட அறிக்கை, வடகொரியா நீண்ட நெடுங்காலமாகவே பகி ரங்கமாக அச்சுறுத்தி வருவ தாகக் கூறியது. இதற்கிடையே, வடகொரியா வில் நடத்தப்பட்டு வரும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு அனைத்துலக நிதி வழங்கப்பட்டு வரும் வழியை அடைப்பதற்கான ஒவ்வோர் அம்சத்தையும் தான் பரிசீலிக்கப்போவதாக அமெரிக்க நிதித் துறை தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!