சமூக நீதியை அழிக்கிறது பாஜக: திருமாவளவன்

நெல்லை: மத்திய அரசு சமூக நீதியை அழிக்க நினைப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார். நெல்லையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், தமிழகத்தில் மதவாதத்தை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சிப்பதாக சாடினார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி 3 மாதங்கள் நீடிப்பதே சந்தேகம் எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத் தில் பாஜகவின் பினாமி ஆட்சியே நடப்பதாக விமர்சித்தார். “கூடங்குளத்தில் கொண்டு வரப்பட்ட அணுமின் நிலையத்தை முதலில் கேரளாவில் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டது. அங்குள்ள மக்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடு மையாக போராடியதன் விளைவாக அங்கு இத்திட்டம் கைவிடப்பட்டது. “ஆனால் கூடங்குளத்தில் மக் கள் நடத்திய போராட்டத்திற்கு தமிழக மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு இல்லை. திமுக, அதிமுக வும் ஆதரவு தெரிவிக்கவில்லை,” என்றார் திருமாவளவன்.