டமாஸ்கஸின் பெரும் பகுதி சிரியா ராணுவம் கையில்

டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸின் பெரும் பகுதி அந்நாட்டு ராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக சண்டை போட்டு வரும் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கபோன் மாவட்டத்தை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அந்த மாவட்டத்தில் விமானப் படைத் தாக்குதல்களையும் பீரங்கித் தாக்குதல்களையும் சிரியா ராணுவம் நடத்தியது. கபோன் மாவட்டத்தின் சிறு பகுதி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக போராளி அமைப்பு கூறியது.