தீவிர சிகிச்சைப் பிரிவில் மலேசியாவின் பாஸ் கட்சித் தலைவர்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மாராங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு அப்துல் ஹாடி அவாங்கின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தேவை ஏற்படும்போது வெளியிட இருப்பதாக பாஸ் கட்சியின் செயலாளர் டாக்டர் அகமது சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.