சீனாவில் லட்சக்கணக்கான கணினிகள் பாதிப்பு

பெய்ஜிங்: பிணைத் தொகை கேட்கும் மென்பொருளைக் கொண்டு நடத்தப்பட்ட இணையத் தாக்குதலின் விளைவாக சீனாவில் லட்சக்கணக்கான கணினிகள் பாதிக்கப்பட்டன. அரசாங்க அமைப்புகள் உட்பட ஏறத்தாழ 30,000 அமைப்புகளின் கணினிகள் இணையத் தாக்கு தலின் காரணமாக முடங்கியதாக சீனாவின் முன்னணி மென் பொருள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது. இணையத் தாக்குதலில் அர சாங்க அலுவலகங்கள், பல்கலைக் கழகங்கள், தானியக்க வங்கி இயந்திரங்கள், மருத்துவமனை கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது.

இணையத் தாக்குதல் சீனாவில் உள்ள மேலும் பல கணினிகளுக்குப் பரவி வருவதாக அந்நாட்டின் தேசிய இணைய அமைப்பு கூறியது. ஆனால் இணையத் தாக்குதலின் தீவிரம் குறைந்து வருவ தாக அது தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து சீன அரசாங்கம் முழு விவரங்களை வெளியிடவில்லை. இணையத் தாக்குதலின் காரணமாக வாடிக்கையாளர்கள் கடைகளில் ரொக்கத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தது. சீனப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இணையத் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இணைய இணைப்பைத் துண்டித்துவிட்டு கணினிகளை இயக்குமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.