வர்த்தக ஒப்பந்தத்தைக் காப்பாற்ற ஆசிய பசிபிக் நாடுகள் இணக்கம்

ஹனோய்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் அதிரடியாக விலகியதால் உலகின் 40 விழுக் காடு பொருளியலை உள்ளடக்கும் 12 பசிபிக் நாடுகளுக்கு இடை யிலான 'டிபிபி' எனும் வர்த்தக ஒப்பந்தம் கேள்விக்குறியாகி விட்டது. இந்நிலையில் டிபிபிக்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபட ஹனோயில் நேற்று கூடிய ஆசிய பசிபிக் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். இதில் இடம்பெற்றுள்ள எஞ்சிய உறுப்பு நாடுகள், நாடுகளுக்கு இடையிலான தாராள வர்த்தகத்தை ஒப்பந்தம் மேம்படுத்தும் என்று நம்புகின்றன.

தற்போது ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதிய டிபிபி-II ஒப்பந்தத் துக்கு முன்னணி வகிக்கின்றன. சிங்கப்பூரும் இதில் இடம்பெற்றுள் ளது. ஹனோயில் காலை நேர பரபரப் புக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டோட் மெக் கிலே, "டிபிபி-II ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வழிகள் கண் டறியப்படும்," என்றார். அதே சமயத்தில் அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் அந்நாடு மீண்டும் இணைவதற்கான ஒத்து ழைப்புகளை எந்நேரத்திலும் வழங்க வர்த்தக பிரதிநிதிகள் ஒப்புதல் தெரிவித்தனர். இதற்கிடையே ஹனோயில் பேசிய அமெரிக்க வர்த்தக அமைச் சர் ராபர்ட் லைட்டிசர், "டிபிபி விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவில் மாற்றமில்லை," என்று கூறினார்.

ஹனோயில் கூடிய ஆசிய பசிபிக் நாடுகளின் வர்த்தக அமைச் சர்களில் சிலர். (இடமிருந்து பின்பக்கம்) சிங்கப்பூர் வர்த்தக தொழில் அமைச்சர் (வர்த்தகம்) லிம் ஹங் கியாங், நியூசிலாந்து அமைச்சர் டோட் மெக்கிலே, மலேசிய அமைச்சர் முஸ்தபா முஹமட், (இடமிருந்து முன்பக்கம்) பெரு அமைச்சர் எட்வர்டோ ஃபெரெயிரோஸ், மெக் சிகோவின் இல்டெஃபோன்சோ குவாஜார்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!