அன்வாரை விடுவிக்கக் கோரும் பிரசாரத்துக்கு டாக்டர் மகாதீர் ஆதரவு

ஷாஆலம்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகா தீர், சிறையில் உள்ள அன்வார் இப்ராஹிமை விடுவிக்கக் கோரும் பிரசார இயக்கத்துக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி யிருக்கிறார். நேற்றுக் காலை நடைபெற்ற ‘பிகேஆர்’ கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், அன்வாரை விடுவிக்கக் கோரும் மனுவில் கையெழுத்திட்டார். ஆனால் பிரசார வாசகங்களை கையில் ஏந்துவதை அவர் தவிர்த்துவிட்டார். அதற்குப் பதிலாக தனது கைபேசி மூலம் உற்சாகமுடன் இருந்த பொதுமக்களை அவர் படம்பிடித்து மகிழ்ந்தார். முன்னதாக ‘பிகேஆர்’ கட்சி யின் தலைவர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயிலும் உதவி தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரும் உரையாற்றினர்.

பிகேஆர் கட்சி கூட்டத்தில் (இடமிருந்து) முன்னாள் பிரதமர் மகாதீர், சிலாங்கூர் முதல்வர் அஸ்மின் அலி, பிகேஆர் கட்சித் தலைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில். படம்: த ஸ்டார்