முஸ்லிம் மாநாட்டில் டிரம்ப் உரை

ரியாத்: அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது சவூதி அரேபியா பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று அரபு இஸ்லாமிய-அமெரிக்க மாநாட்டில் முக்கிய உரையாற்றி னார். இதில் பயங்கரவாதத்தை எதிர் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசினார். இதே மாநாட்டில் சனிக்கிழமை அன்று பேசிய மலேசிய பிரதமர் நஜிப், பயங்கரவாதத்துக்கு எதி ராக ஒன்றுசேர்ந்து போராட முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் சமய நல்லிணக்கம் பற்றி பேசிய அவர், தற்போதைய மலேசியாவில் முஸ்லிம்களும் இந்துக்களும் பௌத்தர்களும் கிறிஸ்துவர்களும் மற்றவர்களும் சமய நல்லிணக்கத்தோடு வசிப் பதைப்போன்றே மத்திய கிழக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், யூதர்கள் ஒன்றாக வாழ்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு தோழமை உணர் வோடு இருந்ததைச் சுட்டிக்காட்டினார். சனிக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் மாநாட்டில் ஐம்பதுக் கும் மேற்பட்ட அரபு, முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்றனர். பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக ஒத்துழைக்கும் வழிகள் குறித்து அவர்கள் மாநாட்டில் விவாதித்தனர்.

சவூதி அரேபியாவின் பாரம்பரிய போர் வாள் நடனத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார். படம்: ஏஎஃப்பி