ஐநா கோரிக்கையைப் புறக்கணித்து சோதித்த வடகொரியா

அனைத்துலக நாடுகள் எவ்வ ளவோ கேட்டுக்கொண்டும் அதனைச் சற்றும் செவிமடுக்காத வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை மீண்டும் பாய்ச்சியுள்ளதாக தென் கொரியாவும் ஜப்பானும் தெரி வித்துள்ளன. இடைநிலை ஏவு கணை ஒன்றை பாய்ச்சி சோதித்த ஒரு வாரத்திற்குள் நேற்று மீண் டும் வடகொரியா தனது கிழக்குக் கடற்கரை அருகே ஏவுகணையைப் பாய்ச்சியதாக அவ்விரு நாடு களும் குறிப்பிட்டுள்ளன. தலைநகர் பியோங்யாங்கிலி ருந்து வடகிழக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக் சாங்கில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.59க்கு அந்த ஏவுகணையை வடகொரியா பாய்ச் சியதாக தென்கொரிய கூட்டுப் படைத் தளபதிகள் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் தோல்வியில் முடிவுற்ற ஏவுகணை பாய்ச்சப் பட்ட அதே இடத்திலிருந்து நேற்றைய ஏவுகணை செலுத்தப் பட்டதாகவும் அது 500 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சென் றதாகவும் அந்த அறிக்கை தெரி வித்தது. இது குறித்து ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செய லாளர் யோ‌ஷிஹைட் சுகா கூறு கையில் ஜப்பானின் சிறப்புமிக்க பொருளியல் மண்டலத்துக்கு வெளியே ஏவுகணை நிலை கொண்டதாகவும் அதனால் கப் பல்களுக்கோ விமானங்க ளுக்கோ பாதிப்பில்லை என்றும் குறிப்பிட்டார். இதற்கிடையே, இச்சோதனை பற்றி வெள்ளை மாளிகை அறிந் திருப்பதாக சவூதி அரேபியாவுக்கு அதிபர் டிரம்ப்புடன் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!