அமெரிக்காவைப் புறக்கணித்து ரஷ்யா பக்கம் சாயும் பிலிப்பீன்ஸ்

மணிலா: அமெரிக்காவின் நீண்ட நாள் நட்பு நாடாக விளங்கிய பிலிப்பீன்ஸ் அந்தப் போக்கிலிருந்து மாறி ரஷ்யா பக்கம் சாய்ந்துள்ளது. பிலிப்பீன்ஸ் வெளிநாட்டு கொள்கையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக பிலிப் பீன்ஸ் அதிபர் டுட்டர்டே நேற்று மாஸ்கோ புறப்பட்டார். அங்கு தமது கதாநாயகனை அவர் சந்திக்கவிருக்கிறார். மேலும் பிலிப்பீன்ஸ் நாட்டுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்கு வது அவரது பயணத்தின் நோக் கம். பிலிப்பீன்ஸ் அதிபரின் இரண்டு நாள் பயணத்தில் ரஷ்யாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே உறவு மேலும் வலுப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டுட்டர்டே அதிபர் பொறுப்பு ஏற்ற பிறகு பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த அமெரிக்க-பிலிப்பீன்ஸ் உறவில் சிக்கல் ஏற்பட்டது. அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதாகவும் சொல்வ தொன்று செய்வதொன்றுமாக இருக்கிறது என்றும் டுட்டர்டே சாடி வந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட் டினை தமது கதாநாயகனாக வரு ணிக்கும் டுட்டர்டே, தனக்கும் புட்டினுக்கும் இடையே உள்ள துப் பாக்கிகள், வேட்டையாடுதல் போன்ற பொதுவான ஆர்வங்களை சுட்டிக்காட்டினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேசிய அவர், ரஷ்ய பயணத்தின் முக்கிய நோக்கம் துல்லியமாக வழிகாட்டும் வெடி குண்டை வாங்குவது என்று கூறி யிருந்தார். தெற்கு பிலிப்பீன்சில் உள்ள ஐஸ்ஐஎஸ் போராளிகளுக்கு எதிராக அந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்த அவர் திட்டமிட்டுள் ளார். "எங்களிடம் எவ்வளவோ திறன்வாய்ந்த வெடிகுண்டுகள் உள்ளன. ஆனால் அவ்வளவு துல் லியமானது அல்ல," என்று பிலிப் பீன்ஸ் அதிபர் டுட்டர்டே தெரிவித் தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!