பேங்காக் குண்டுவெடிப்பில் 24 பேர் காயம்

பேங்காக்: பேங்காக்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 24 பேர் காயம் அடைந்தனர் என்று தாய் லாந்து போலிசார் நேற்று தெரி வித்தனர். அந்த மருத்துவமனையில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மருந்து களைப் பெறுவதற்காகக் காத் திருந்தபோது குண்டு வெடித்தது என்று அவர்கள் கூறினர். "அது வெடிகுண்டுதான்," என்று தேசிய காவல்துறை துணைத்தலைவர் ஸ்ரீவாரா ரன் சிபிரஹாமனகுல் தெரிவித்தார். "சம்பவ இடத்தில் பேட்டரி, மின்சார கம்பிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதன் பின்னணியில் செயல் பட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து வரு கிறோம்," என்றார் அவர். கண்ணாடி உடைந்து சிதறிய தால் பெரும்பாலானவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

ராணுவ மருத்துவமனையில் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சோதனையில் ஈடுபட்ட நிபுணர்கள். படம்: த நேஷன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!