இஸ்ரேலில் அதிபர் டிரம்ப்

டெல் அவிவ்: முதல் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து கொண் டிருக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன வட்டாரத்துக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். சவூதி அரேபியாவில் அரபு, முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிறகு அவர் அடுத்த கட்டப் பயணத்தைத் தொடங் கினார். இரண்டு நாள் பயணத்தில் அவர் இஸ்ரேல், பாலஸ்தீன தலை வர்களைச் சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் நேற்று உள்ளூர் நேரப் படி பிற்பகல் 12.25 மணிக்கு அதிபர் டிரம்ப்பின் ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானம் தரையிறங்கியது. அப்போது பேசிய திரு டிரம்ப், இந்த வட்டாரத்தில் அமைதியை கொண்டு வருவதற்கான ‘அரிய வாய்ப்பு’ என்று குறிப்பிட்டார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் இஸ்ரேலிய அதிபர் ரியுவன் ரிவ்லின் (இடம்), பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு (வலம்) ஆகியோருடன் அமர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்