மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்: 22 பேர் பலி

பிரிட்டனின் வடக்கு நகரான மான்செஸ்டரிலுள்ள மான்செஸ் டர் அரங்கில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் குழந்தைகள் உள் ளிட்ட 22 பேர் மாண்டனர். 59 பேர் காயமடைந்தனர். அமெரிக்க பாப் இசைப் பாடகி அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பிரிட்டன் நேரம் இரவு 10-.33 மணிக்கு அப்பகுதியில் குண்டு கள் வெடித்தன. இத்தாக்குதல் சம்பவம் தொடர் பாக வடக்கு மான்செஸ்டர் நக ரான சோர்ல்டனில் 23 வயது ஆடவர் ஒருவரை பிரிட்டிஷ் ஆயுதப் படை போலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என்று ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இது தற் கொலைத் தாக்குதல் அல்ல என் றும் இசையரங்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது என்றும் அது கூறியுள்ளது. ஆடவர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவித்தன. அடையாளம் தெரிந்தவுடன் மாண்டோரின் பெயர் விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட் டன. முதல் அறிவிப்பாக 18 வயது மாணவி ஜியோர்ஜினா கலேண்டர் என்பவர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடைபெற்ற மான்செஸ்டர் அரங்கில் தடய வியல் அதிகாரிகள் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ராய்ட்டர்ஸ்