சுடச் சுடச் செய்திகள்

தனவல்லி மீது குழந்தை கொடுமை குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: ஆறு வயது குழந் தையைக் கொடுமைப்படுத்தியதாக மூதாட்டி ஒருவர் மீது கோலாலம்பூர் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. வி.தனவல்லி, 62, எனப்படும் அவர் கடந்த செப்டம்பர் மாதம் புக்கிட் பூச்சோங்கிலுள்ள தாமான் பூச்சோங் பெர்தானாவிலுள்ள வீட் டில் சிறுமியை குச்சியால் தாக்கி யதாகத் தெரிவிக்கப்பட்டது. குழந் தையின் முகம், கைகள், உடல் பாகங்களில் அவர் தாக்கிய சம்ப வம் காணொளி வடிவில் இம்மாதத் தொடக்கத்தில் சமூக ஊடகங் களில் பரவியது. அதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி தனவல்லி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் நேற்று தமிழில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது தனவல்லி அவற்றை மறுத் தார். பின்னர் அவருக்கு 10,000 ரிங்கிட் பிணை அனு மதிக்கப் பட்டது. அடுத்த மாதம் 14ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். முன்னதாக, அந்தக் காணொ ளியை ‘வாட்ஸ்அப்’பில் பார்த்த பலரும் புக்கிட் பூச்சோங் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மேசையில் சாப்பாட்டை சிதறிய தற்காக ஆறு வயது குழந்தையை முதுகு சொறியும் குச்சியால் மீண் டும் மீண்டும் தாக்குவதும் வலி யால் குழந்தை துடிப்பதும் கிட்டத் தட்ட மூன்று நிமிடம் ஓடக்கூடிய காணொளியில் பதிவாகி இருந் தது. காணொளியை பக்கத்து வீட்டுக்காரர் பதிவு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட குழந்தை மீட்கப் பட்டு செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் சுபாங் ஜெயா மாவட்ட தலைமை போலிஸ் அதிகாரி முகம்மது அஸ்லின் செடாரி தெரிவித்திருந்தார்.

நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வி.தனவல்லி, 62. படம்: மலேசிய ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon