சுடச் சுடச் செய்திகள்

கோபியின் சட்டவிரோதச் செயல்கள் பற்றி தெரியாது

கோலாலம்பூர்: மலாக்காவில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் தமக்கும் தமது குடும்பத்துக் கும் நன்கு தெரிந்தவர் என்றும் ஆனால் சந்தேகத்துக்குரிய அவ ரது குற்ற நடவடிக்கைகள் பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றும் மலேசிய தலைமை போலிஸ் அதிகாரி காலிட் அபு பக்கர் (படம்) கூறியுள்ளார். மலாக்காவில் கடந்த மாதம் அதிகாரிகள் நடத்திய வேட்டை யில் 13 சந்தேகப் பேர்வழிகள் சிக்கினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.

கோபி என்றழைக்கப்படும் கோபி நாதன் கிருஷ்ணன், 50, என்ப வரும் கைது செய்யப்பட்டோரில் ஒருவர். மலாக்கா காவல் துறை யினருக்கு லஞ்சம் பெற்றுத்தரும் தரகராகவும் சூதாட்டம், விபசாரம் போன்ற சட்டவிரோதச் செயல் களை நடத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை கோபி எதிர் நோக்குகிறார். இந்நிலையில், தலைமை போலிஸ் அதிகாரி காலிட் அபு பக்கருடன் சந்தேக நபர் கோபி தொலைபேசித் தொடர்புகளை வைத்துள்ளதாக நேற்று முன் தினம் ‘த சரவாக் ரிப்போர்ட்’ தெரிவித்திருந்தது. திரு காலிட், அவரது மகன், அவரது மருமகன் ஆகியோருட னும் கோபிக்குத் தொடர்பு உண்டு என்றும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon