சுடச் சுடச் செய்திகள்

பேங்காக் மருத்துவமனை தாக்குதல்: சந்தேகப் பேர்வழி கைது

பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் 24 பேர் காயம் அடையக் காரணமாக இருந்த குண்டுவெடிப்பு தாக்கு தல் தொடர்பில் 62 வயது சந்தேகப் பேர்வழியை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் கூறியுள்ளார். மே 22ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு, ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களே காரணம் என்று தாய்லாந்து அரசங்கம் கூறி வந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் பிரவிட் வோங்சுவான் கூறினார். அத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பிரபலமான மருத்துவமனை அது என்பதால் ராணுவத்தினரைக் குறிவைத்து அரசாங்க எதிர்ப் பாளர்கள் நடத்திய தாக்குதல் அது என்று ராணுவ ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். தாய்லாந்தில் 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சி மூலம் ராணுவம் ஆட்சியைக் கைப் பற்றியது முதல் கடந்த மூன்று ஆண்டு காலமாக ராணுவ ஆட்சி அங்கு நீடிக்கிறது. ராணுவ ஆட்சிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா அறிவித்துள்ளார். இதற்கிடையே யாலா, நரதிவாட் உள்ளிட்ட தென் தாய்லாந்து மாநிலங்களில் பிரிவனைவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரு கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon