பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றியது ஜப்பான்

தோக்கியோ: சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதா ஒன்றை ஜப்பானிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து பல் வேறு வகையான திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கு கடுமை யான தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது. ஜப்பானிய நாடாளுமன்றத்தில் மேலவை உறுப்பினர்கள் நேற்று அந்த மசோதாவை நிறைவேற்றி னர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு இருந்துவந்த நிலையில் 4-வது முயற்சியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில் ஜப்பானில் பாதுகாப்பை வலுப் படுத்த இத்தகைய சட்டம் தேவை என்று அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால் அந்த மசோதாவை பலர் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஜப்பானில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகக் கூறப்பட்டது.