லண்டனில் தீ: பலி எண்ணிக்கை உயரக்கூடும்

லண்டன்: லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் மூண்ட தீக்கு இதுவரை 17 பேர் பலியான தாக போலிசார் தெரிவித்துள்ளனர். வடக்கு கென்சிங்டனில் உள்ள 24 மாடிக் கட்டடத்தில் மூண்ட தீயை அணைக்க தீயணைப் பாளர்கள் போராடி வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீ மூண்டபோது அக்கட்ட டத்தினுள் சிக்கியிருந்தவர்களில் சுமார் 65 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் சுமார் 34 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் காயம் அடைந்தவர் களில் 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனைத் தகவல்கள் கூறின.

தீ மூண்டபோது அக் கட்டடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. காயம் அடைந்தவர்களைத் தவிர அக்கட்டடத்திலிருந்து எத்தனை பேர் தப்பித்தனர், இன்னும் எத்தனை பேர் உள்ளே சிக்கி உள்ளனர் அல்லது பலியாகி யிருக்கக்கூடும் என்ற விவரங் களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தீ மூண்ட கட்டடத்தினுள் சிக்கியிருப்பவர் களில் யாரேனும் உயிருடன் இருப்பார்களா என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக மீட்புக் குழுவினர் கூறினர்.

அக் கட்டடத்தினுள் தீ இன்னமும் எரிந்து கொண்டிருப்பதால் தேடும் பணி மிகவும் சிரமமாக உள்ளது என்று தீயணைப்புப் பிரிவின் ஆணையாளர் டேனி காட்டன் கூறினார். அக்கட்டடத்தினுள் இன்னும் எத்தனை பேர் சிக்கி யுள்ளனர் என்பதும் தெரியவில்லை என்று அவர் சொன்னார். அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, தீச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார்.

தீயில் மோசமாகச் சேதம் அடைந்த கட்டடத்திற்கு அருகே பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக நிவாரண நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தீயில் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவ பலர் முன்வந்தனர். உணவுப் பொருட்கள், போர்வைகள் மற்றும் தண்ணீர்போத்தல்கள் போன்ற நன்கொடைகள் நிவாரண நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளன. லண்டனில் நடந்த இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் மற்றும் ஒரு பேரிடரை லண்டன் மக்கள் சந்தித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்